பள்ளிகள் மூடல், 2 மாதத்திற்கான உணவுகளை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் - பாக்., அலெர்ட்
பாகிஸ்தான் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
போர் பதற்றம்
காஷ்மீர், பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், இரு நாட்டு எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்தியாவில் பல்வேறு காரணங்களுக்காக தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் இரண்டு நாட்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 6 நாட்களாக இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.
பாக்., அலெர்ட்
இந்நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டுக்கு அருகே வசிக்கும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மாகாணத்தின் தலைவர் சௌத்ரி அன்வர் உல் ஹக் வெளியிட்டுள்ள வீடியோவில்,
எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகே உள்ள மக்கள் இரண்டு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை சேமித்து வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக 3.5 மில்லியன் டாலர் (சுமார் ஒரு பில்லியன் ரூபாய்) அவசர நிதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அரசு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.