‘இந்தாங்க ஸ்வீட் சாப்பிடுங்க’ - இந்தியா, பாகிஸ்தான் வீரர்களின் சுதந்திர தின கொண்டாட்டம்
பாகிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டிவாஹா எல்லையில் இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப்படையினர் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
இந்திய சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில் இன்று பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் அருகே இருக்கும் அடாரி-வாஹா எல்லையில் இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இனிப்புகளை வழங்கி பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
சுதந்திர தினத்தன்று இரு நாட்டு வீரர்களும் இருதரப்புக்கும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களைக் கூறுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
சில தவிர்க்க முடியாத அரசியல் சூழல், போர்சூழல், தீவிரவாதிகள் பிரச்சினையின்போது மட்டும் இரு நாட்டு படைகளும் இனிப்புகளை பகிரமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.