புதிய பிரதமர் தேர்தெடுக்கப்படும் பணிகள் மும்முரம் - பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் பிரதமர் இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன.
இதனால் இம்ரான் கானுக்கு கொடுத்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் வாங்கிக் கொண்டது. ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையில் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று பாராளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்தார்.
இதற்கிடையில் பாகிஸ்தானில் நடைபெறும் அரசியல் குழப்பத்தால் அங்கு எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது.
இதனால் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. இதற்கிடையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான ஷபாஸ் ஷெரீப்பை பிரதமராக தேர்ந்தெடுத்து எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கிறது.
இதனால் அவர் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. பாகிஸ்தானுக்கான புதிய பிரதமர் தேர்தெடுக்கப்படும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது புதிய பிரதமர் தேர்தெடுக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 2 நாட்களுக்கு முன்னர் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து, பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil
