பாகிஸ்தானில் இந்து கோவில் மீது சராமாரி தாக்குதல்!
பாகிஸ்தானில் கிழக்கு பஞ்சாப் மகாணத்தில் இருக்கும் இந்து கோவில் மீது குண்டர்கள் சிலர் தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தியதற்கு இந்த வார தொடக்கத்தில் சிறுவன் ஒருவர் மதப்பள்ளியை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டது காரணமாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த மக்கள் சிறுபன்மையராக உள்ளனர். அங்கிருக்கும் முஸ்லிம் மக்கள் தொகையில் 2 சதவீத பேர் மட்டுமே இந்து.
இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து தகவல் கிடைத்ததும் நிலைமையை கட்டிற்குள் கொண்டுவர அங்கு போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் போலீசார் அங்கு வருவதற்குள் இந்து கோவிலை குண்டர்கள் சிலர் அடித்து நொறுக்கி உள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் ட்விட்டர் பக்கத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.