தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் - பாகிஸ்தான் அரசு அதிரடி!

Government Covid 19 Pakistan
By Thahir Aug 07, 2021 02:32 AM GMT
Report

பாகிஸ்தானில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் - பாகிஸ்தான் அரசு அதிரடி! | Pakistan Government Covid 19

பாகிஸ்தானில் இதுவரையில் 10 லட்சத்து 58 ஆயிரத்து 405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்து 54 ஆயிரத்து 711 பேர் மீண்டுள்ளனர். 23 ஆயிரத்து 702 பேர் மீள முடியாமல் இறந்துள்ளனர்.

இந்த நிலையில் அங்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. அங்கு கூடுதலான எண்ணிக்கையில் தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு, முகாம்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்று பாகிஸ்தான் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிப்பு, அலுவலகம் வர அனுமதி மறுப்பு, சம்பளம் கிடையாது, ஓட்டல்கள்-வணிக வளாகங்களில் நுழைய அனுமதி ரத்து என அதிரடி நடவடிக்கைகளால் மக்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

தடுப்பூசி முகாம்களில் மணிக்கணக்கில் காத்து நின்று அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.