காதலனோடு ஜாலியாக இருந்த சகோதரி - சகோதரன் செய்த இந்த கொடுமைய பாருங்க!
காதலனோடு ஜாலியாக இருந்த சகோதரியை நேரில் பார்த்த அவரின் சகோதரர் இருவரையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்தில் உமர் என்பவர் தன்னுடைய சகோதரி மெஹ்விஷ்ஷோடு வசித்து வந்துள்ளார் . அவரின் வீட்டருகே உமரின் நண்பர் அஷ்பக் என்ற வாலிபரும் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அஷுபக் மற்றும் மெஹ்விஷ் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மெஹ்விஷ் தனது காதலர் அஷ்பக்கை அவரது வீட்டிற்கு அழைத்திருந்தார்.
வீட்டிற்கு வந்த அஷ்பக் தனது காதலியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுதி நேரத்திலேயே வீட்டிற்கு வந்த சகோதரர் உமர், இருவரும் ஒன்றாக இருப்பதை நேரில் பார்த்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த உமர் துப்பாக்கியை காட்டி இருவரையும் மாடிக்கு வர சொல்லி மிரட்டியுள்ளார். அப்போது இருவரும் வர மறுத்ததால், அவர்களை தரதரவென இழுத்து சென்று துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த காதலர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு
விரைந்த போலீசார் சடலங்களை மீட்டு உமரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.