பாகிஸ்தான் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குழந்தை உயிருடன் மீட்பு - பதற வைக்கும் வீடியோ...!
பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை
பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பாகிஸ்தானில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானில் கடந்த ஜூன் 14ம் தேதி முதல் தொடங்கிய கனமழை நேற்று வரை தொடர்ந்து பெய்து வருகிறது. தொடர் கனமழையால் பாகிஸ்தானில் முழு கட்டிடங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.பல மேம்பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. பாகிஸ்தானின் பல நகரங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. மக்கள் தங்க இடமின்றி, உணவின்றி பரிதவித்து வருகின்றனர்.

வைரலாகும் வீடியோ
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வெள்ளப் பெருக்கின்போது குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அக்குழந்தை வெள்ளப் பெருக்கில் அடித்து செல்லப்பட்டு மண்ணுக்குள் புதைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. அந்தக் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு, சிலர் அக்குழந்தையை உயிருடன் காப்பாற்றியுள்ளனர். ஆனால், அக்குழந்தையின் தாய் இருக்கும் இடம் இன்னும் தெரியவில்லை.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் நெஞ்சம் ரணமாக்கியுள்ளது. நெட்டிசன்கள் பலர் அக்குழந்தைக்காக பிரார்த்தனை செய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
You worry what you'll eat or what you'll wear but God has all your plans.The baby was born in Pakistan Floods,survived and the whereabout of the mother is still unknown;Acheni Mungu aitwe Mungu!?
— Chelubai. (@chellubai) August 29, 2022
Auctioneers // Form 34A // Rongai Safaricom // Oparanya // Baba the 6th#kibra pic.twitter.com/z4TGEwhzmv