பாகிஸ்தானில் ஆற்றுவெள்ளத்தில் சிக்கிய 5 இளைஞர்கள் - பதைபதைக்கும் வீடியோ

Viral Video Pakistan
By Nandhini Aug 29, 2022 06:32 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

பாகிஸ்தானில் ஆற்றுவெள்ளத்தில் சிக்கிய 5 இளைஞர்கள் வெள்ளத்தில் அடித்துச் சென்ற அதிர்ச்சி வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானில் கனமழை

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பாகிஸ்தானில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தானில் கடந்த ஜூன் 14 முதல் தொடங்கிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. தொடர் கனமழையால் பாகிஸ்தானில் முழு கட்டிடங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். பல மேம்பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. பாகிஸ்தானின் பல நகரங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. மக்கள் தங்க இடமின்றி, உணவின்றி பரிதவித்து வருகின்றனர்.

Pakistan

வைரல் வீடியோ

இந்நிலையில், பாகிஸ்தான், கோஹிஸ்தானில் உள்ள ஆற்றில் 5 இளைஞர்கள் சிக்கிக் கொண்டனர். இவர்கள் 5 மணி நேரமாக ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடி பரிதவித்தனர். ஆனால், துரதிஷ்டவசமாக பெருக்கெடுத்து ஓடிய ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.