வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்காக இந்து கோவில் அதன் கதவுகளைத் திறந்தது - வைரலாகும் புகைப்படம்

Viral Video Pakistan
By Nandhini Sep 13, 2022 08:20 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு இந்து கோவிலில் தங்குமிடம், உணவு கொடுத்து இந்துக் குடும்பங்களால் பராமரிக்கப்பட்டு வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் பெய்த கனமழை

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் 1000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

தொடர் கனமழை பெய்ததால், பாகிஸ்தானில் முழு கட்டிடங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. பல மேம்பாலங்கள் இடிந்து விழுந்தன. பாகிஸ்தானின் பல நகரங்கள் வெள்ளத்தால் மூழ்கின. மக்கள் தங்க இடமின்றி, உடுத்த உடையின்றி, உணவின்றி பரிதவித்து வருகின்றனர்.

pakistan-floods-hindu-temple

அடைக்கலம் கொடுத்த இந்து கோவில்

இந்நிலையில், கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் முஸ்லீம் மக்களுக்கு தங்குவதற்கு, இந்துக் கோவிலை கொடுத்து, இந்துக் குடும்பங்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

பலுசிஸ்தானில் உள்ள ஜலால் கான் கிராமம் அருகே உள்ள ஒரு இந்து கோவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கி இருளில் ஒளி கொடுத்துள்ளது. இந்த இந்து கோவில் கான்கிரீட்டால் கட்டப்பட்டது. மேலும் இக்கோவில் மிகப் பெரிய பரந்த அளவில் அமைக்கப்பட்டது.

இது உயரமான நிலப்பரப்பில் அமைந்திருந்ததால், கடும் வெள்ளத்தில் இக்கோவில் மிகவும் பாதுகாப்பாக இருந்துள்ளது. தற்போது இக்கோவிலில் குறைந்தபட்சம் 200-300 பாகிஸ்தான் முஸ்லீம்கள் தங்கியுள்ளனர். அவர்களது கால்நடைகள் வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மக்கள் அனைவரையும் இந்து குடும்பங்கள் உணவு, உடைகள் கொடுத்து பராமரித்து வருகின்றனர்.

தற்போது இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.