பாகிஸ்தான் வெள்ளப் பேரிடரை சமாளிக்க நன்கொடை வழங்கிய சீன நிறுவனங்கள்...!
பாகிஸ்தான் வெள்ளப் பேரிடரை சமாளிக்க சீன நிறுவனங்கள் நன்கொடை வழங்கியுள்ளன.
பாகிஸ்தானில் கனமழை
பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பாகிஸ்தானில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் கடந்த ஜூன் 14 முதல் தொடங்கிய கனமழை நேற்று வரை தொடர்ந்து பெய்து வருகிறது.
இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 300க்கு மேற்பட்ட குழந்தைகள் உட்பட 937 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் கனமழையால் பாகிஸ்தானில் முழு கட்டிடங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பல மேம்பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. பாகிஸ்தானின் பல நகரங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. மக்கள் தங்க இடமின்றி, உணவின்றி பரிதவித்து வருகின்றனர்.
சீன நிறுவனங்கள் நன்கொடை
இந்நிலையில், வெள்ளப் பேரிடரை சமாளிக்க பாகிஸ்தானுடன் சீனா உதவிக்கரம் நீட்டியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள சீன நிறுவனங்கள் 15 மில்லியன் பிகேஆர் (68 கோடி அமெரிக்க டாலர்கள்) நன்கொடையாக பாகிஸ்தானுக்கு அளித்துள்ளன.
