பாகிஸ்தான் இயற்கை அழிவு - இணையதளத்தை கலங்க வைக்கும் புகைப்படங்கள்...!
பாகிஸ்தான் வெள்ளத்தில் பரிதவிக்கும் மக்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி உலக மக்களை கலங்க வைத்துள்ளது.
பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை
பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பாகிஸ்தானில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானில் கடந்த ஜூன் 14 முதல் தொடங்கிய கனமழை நேற்று வரை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 300க்கு மேற்பட்ட குழந்தைகள் உட்பட 937 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர் கனமழையால் பாகிஸ்தானில் முழு கட்டிடங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பல மேம்பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. பாகிஸ்தானின் பல நகரங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. மக்கள் தங்க இடமின்றி, உணவின்றி பரிதவித்து வருகின்றனர்.
வைரலாகும் புகைப்படம்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. புகைப்படத்தில் பாகிஸ்தானில் வெள்ளத்தில் உயிரிழந்த ஒரு குழந்தையை ஒருவர் கையில் பிடித்து இழுத்துச் செல்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்க்கும் உலக மக்களை கண்கலங்க வைத்துள்ளது.
Many cities of Pakistan are drowning due to floods, I request to all the people of Pakistan, our government can't do anything, please come out to help them, at this time, many people have become homeless. pic.twitter.com/pEGFUxnzFf
— HáŠśÝ ÀhmâĐ (@ahma_hassy) August 27, 2022
Pakistan is drowning ?#FloodsInPakistan pic.twitter.com/CLArv1qlBq
— Mr Waseem (@mrwaseem295) August 27, 2022