பாகிஸ்தானில் இயற்கை பேரழிவு - முழு கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் சென்ற அதிர்ச்சி வீடியோ...!

Viral Video Pakistan
By Nandhini Aug 27, 2022 04:47 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையில் முழு கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பாகிஸ்தானில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தானை புரட்டியெடுக்கும் கனமழை

பாகிஸ்தானில் கடந்த ஜூன் 14 முதல் தொடங்கிய கனமழை நேற்று வரை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 300க்கு மேற்பட்ட குழந்தைகள் உட்பட 937 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் சுமார் 30 மில்லியன் பேர் தங்க இடமில்லாமல் பரிதவித்து வருகின்றனர். இதனால், பாகிஸ்தான் அரசு தேசிய அவசரநிலையை அறிவித்திருக்கிறது. அரசு மீட்பு நடவடிக்கைளை துரிதப்படுத்தினாலும், இடைவிடாத கனமழையால் நிவாரண பணி நடவடிக்கைகள் மேற்கொள்ள சிரமம் ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் செல்ல முடியாத அளவுக்கு பாகிஸ்தானில் காலநிலை நிலவி வருவதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

pakistan-floods-937-people-death

வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நேற்று பாகிஸ்தானில் முழு கட்டிடங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படுகிறது. இந்த திகிலூட்டும் காட்சியைப் பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.