பாகிஸ்தானில் தேசிய அவசரநிலை பிரகடனம் - இதுவரை 937 பேர் பலி
பாகிஸ்தானில் தொடர் கனமழையால் இதுவரை 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பாகிஸ்தானில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானை புரட்டியெடுக்கும் கனமழை
பாகிஸ்தானில் கடந்த ஜூன் 14 முதல் தொடங்கிய கனமழை நேற்று வரை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 300க்கு மேற்பட்ட குழந்தைகள் உட்பட 937 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் சுமார் 30 மில்லியன் பேர் தங்க இடமில்லாமல் பரிதவித்து வருகின்றனர்.

இதனால், பாகிஸ்தான் அரசு தேசிய அவசரநிலையை அறிவித்திருக்கிறது. அரசு மீட்பு நடவடிக்கைளை துரிதப்படுத்தினாலும், இடைவிடாத கனமழையால் நிவாரண பணி நடவடிக்கைகள் மேற்கொள்ள சிரமம் ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் செல்ல முடியாத அளவுக்கு பாகிஸ்தானில் காலநிலை நிலவி வருவதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
An absolute epitome of courage and true spirit of bravery shown by #AlkhidmatVolunteers while rescuing a terrified soul from this dreadful flood in Swat, KPK.#AlkhidmatFloodRelief #FloodsInPakistan pic.twitter.com/SwHUE6qIy2
— Alkhidmat Foundation Pakistan (@AlkhidmatOrg) August 26, 2022