இப்படியே போனா எப்படி உயிர் வாழ்வது - விலைவாசியால் அல்லாடும் மக்கள்!

Pakistan
By Sumathi Mar 29, 2023 05:53 AM GMT
Report

நிதி நெருக்கடி காரணமாக பாகிஸ்தான் மக்கள் கடுமையாக பாதி்த்துள்ளனர்.

பணவீக்கம்

பாகிஸ்தான் நாட்டின் பணவீக்கம் மார்ச் 22 உடன் முடிந்த வாரத்தில் 47 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை எட்டாகனியாக மாறிவிட்டது. வெங்காயத்தின் விலை மட்டும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 228.28 சதவீதம் அதிகரித்துள்ளது.

இப்படியே போனா எப்படி உயிர் வாழ்வது - விலைவாசியால் அல்லாடும் மக்கள்! | Pakistan Economic Crisis Rice Prices Rise

இதேபோல் கோதுமை மாவின் விலை 120.66%, சிகரெட்டின் விலை 165.88%, லிப்டன் தேயிலையின் விலை 94.60% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1 கிலோ ரூ.700 என இருந்த இறைச்சி விலை ரூ.1,000 வரையும், மட்டன் விலை ரூ.1,400-ல் இருந்து ரூ.1,800 வரையும் உயர்ந்துள்ளது.

விலை உயர்வு

குறிப்பாக ஒரு கிலோ அரிசி விலை ரூ.70-ல் இருந்து ரூ.335 ஆக உயர்ந்து மக்களை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. இதுமட்டுமின்றி, உயிர்காக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இறக்குமதி தடுப்பூசிகள், மயக்க மருந்துகள் உள்ளிட்டவைகளுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் 5 மாதங்களில் இரண்டாவது முறையாக பணவீக்கம் 40 சதவிதத்திற்கு மேல் உயர்ந்துள்ளதாக தெரிகிறது.