பாகிஸ்தானில் நிலநடுக்கம் - அலறி அடித்துக் கொண்டு ஓடிய மக்கள்...!

Pakistan Earthquake
By Nandhini Nov 01, 2022 06:34 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

பாகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடினர்.

பாகிஸ்தானில் நிலநடுக்கம் - மக்கள் அச்சம்

பாகிஸ்தானின், இஸ்லாமாபாத்தில் இன்று அதிகாலை 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இஸ்லாமாபாத்திலிருந்து 303 கிலோமீட்டர் தொலைவில் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் லேசாக ஆடின. இதனால், மக்கள் அச்சம் அடைந்து வீட்டை விட்டு ஓடி வெளியே பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர்.

இது தொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் - 

இந்திய நேரப்படி 01:15:01 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 120 கி.மீ வரை நில அதிர்வு ஏற்பட்டது. 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

pakistan-earthquake