பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு

Death earthquake Pakistan
By Thahir Oct 07, 2021 04:24 AM GMT
Report

பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் உள்ளது ஹர்னாய் என்ற நகரம். இங்கிருந் து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு | Pakistan Earth Quake Death

இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது. நிலநடுக் கம் காரணமாக, அந்தப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். சில பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்ததில் குழந்தைகள், பெண்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பேரிடம் மேலாண்மை குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மாகாண அமைச்சர் மிர் ஜியா உல்லா லங்காவ் கூறும்போது, 'நிலநடுக்கம் காரணமாக 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. மீட்பு பணிகள் அங்கு தொடர்ந்து நடை பெற்று வருகின்றன' என்றார்.