அதிகளவு பாலியல் மாத்திரைகளை எடுத்துக்கொண்ட டிஐஜி - பெண் அதிகாரியுடன் இருந்தபோது நேர்ந்த சோகம்!

Pakistan Death
By Vinothini Jul 23, 2023 09:45 AM GMT
Report

போலீஸ் டிஐஜி பெண் அதிகாரி ஒருவருடன் இருந்தபொழுது நேர்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிஐஜி

பாகிஸ்தான் நாட்டில் லாகூர் மாகாணத்தில் டிஐஜியாக பணியாற்றி வருபவர் ஷெரிக் ஜமால். இவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். ஆனால், அவர்களை விட்டு பிரிந்து லாகூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியே வசித்து வருகிறார்.

pakistan-dig-dead-by-consuming-aphrodisiac-drugs

இவருக்கும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

உயிரிழப்பு

இந்நிலையில், டிஐஜி ஷெரிக் ஜமாலும் தேர்தல் ஆணைய பெண் அதிகாரியும் இன்று அதிகாலை தனிமையில் இருந்துள்ளனர். அப்பொழுது அவர் பாலியல் உணர்வை தூண்டும் மாத்திரைகளை அதிகமாக எடுத்துள்ளார், அதனால் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

pakistan-dig-dead-by-consuming-aphrodisiac-drugs

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெண் அதிகாரி அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் பெண் தேர்தல் அதிகாரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த டிஐஜி வசித்து வரும் குடியிருப்பில் சோதனை செய்தபோது அங்கிருந்து தடைசெய்யப்பட்ட பாலியல் மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.