இந்திய அரசே காரணம்; எங்களுக்கு தொடர்பில்லை - பாகிஸ்தான்

Pakistan India Jammu And Kashmir Death
By Sumathi Apr 23, 2025 10:35 AM GMT
Report

காஷ்மீர் தாக்குதலுக்கும் எங்களுக்கு சம்பந்தம் இல்லை என பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதல்

காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் மொத்தம் 28 பேர் உயிரிழந்தனர்.

இந்திய அரசே காரணம்; எங்களுக்கு தொடர்பில்லை - பாகிஸ்தான் | Pakistan Denies Kashmir Attack Blames India

தற்போது பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலுக்கு பின்னால் பின்னால் பாகிஸ்தானும் இருக்கிறது என்று பரவலாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், "பாகிஸ்தானுக்கும், இந்தத் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது இந்தியாவில் வளர்க்கப்பட்ட அமைப்பு ஆகும். நாகலாந்தில் இருந்து காஷ்மீர் வரையில், தெற்கில், சத்தீஸ்கர் மற்றும் மணிப்பூரில் என இந்தியாவிற்கு எதிராக ஒன்று அல்ல.. இரண்டு அல்ல..

ஹனிமூனுக்கு சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம் - வைரலாகும் புகைப்பட பின்னணி

ஹனிமூனுக்கு சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம் - வைரலாகும் புகைப்பட பின்னணி

அமைச்சர் விளக்கம் 

டஜன் கணக்கான மாநிலங்களில் புரட்சிகள் உள்ளன. இந்த இடங்களில் இந்திய அரசாங்கத்திற்கு எதிரான புரட்சிகள் இருக்கின்றன. இவை எல்லாம் சொந்த மண்ணிலேயே வளர்க்கப்பட்ட அமைப்புகள் ஆகும். மக்கள் அவர்களின் உரிமைகளை கேட்கிறார்கள்.

அமைச்சர் கவாஜா ஆசிப்

இந்துத்துவா மக்களை சுரண்டி, சிறுபான்மையினர்களை அடக்குகின்றன மற்றும் கிறிஸ்துவர்கள் மற்றும் புத்த மதத்தை சேர்ந்தவர்களை சுரண்டுகின்றனர். அவர்கள் கொல்லப்படுகிறார்கள். அதற்கு எதிரான கிளர்ச்சி இது.

இதனால் தான், இந்த மாதிரியான நடவடிக்கைகளை அங்கு நடக்கின்றன. பலுஜிஸ்தானில் நிலவும் அமைதியின்மைக்கு இந்தியா தான் காரணம். இந்தியா அதற்காக நிதி வழங்கி வருகிறது. இதுக்குறித்து பலமுறை நாங்கள் ஆதாரங்களை வழங்கியுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.