டி20 திருவிழா : ஸ்காட்லாந்தை 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான்

T20WorldCup PAKvSCO
By Irumporai Nov 07, 2021 07:41 PM GMT
Report

 டி20 உலகக்கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தனர்.

பாபர் அசாம் அரை சதம் கடந்து 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சோயப் மாலிக் 18 பந்துகளில் 6 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 54 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்

இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி ஸ்காட்லாந்து தரப்பில் கிறிஸ் கிரீவ்ஸ் 2 விக்கெட் எடுத்தார்.

ஹம்சா தாகிர், சப்யான் ஷரிப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது.

ரிச்சி பெர்ரிங்டன் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 54 ரன்கள் எடுத்தனர், மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இந்த நிலையில் , ஸ்காட்லாந்து 6 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.