அந்த இந்திய வீரர் டேஞ்சரானவர்.. பவுலிங் செய்வது கடினம் - பாக். வீரர் ஷதாப் கான்!

Rohit Sharma Cricket Shadab Khan ODI World Cup 2023
By Jiyath Oct 02, 2023 04:29 AM GMT
Report

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷதாப் கான் இந்திய வீரர் ரோகித் ஷர்மாவை குறித்து பேசியுள்ளார். 

உலகக் கோப்பை

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி போட்டிகள் முடிவடைய உள்ளது.

அந்த இந்திய வீரர் டேஞ்சரானவர்.. பவுலிங் செய்வது கடினம் - பாக். வீரர் ஷதாப் கான்! | Pakistan Cricketer Shadab Khan About Rohit Sharma

இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த 10 வருடங்களாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.

இந்த தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி, இந்தியா வந்து ஹைதராபாத்தில் தங்கியுள்ளனர்.

ஷதாப் கான் பேட்டி

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஷதாப் கான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் முன்னணி வீரர்களில் 'ரோகித் ஷர்மாவுக்கு' பந்துவீசுவது மிகவும் கடினமான ஒன்று.

அந்த இந்திய வீரர் டேஞ்சரானவர்.. பவுலிங் செய்வது கடினம் - பாக். வீரர் ஷதாப் கான்! | Pakistan Cricketer Shadab Khan About Rohit Sharma

அவரை முதல் சில பந்துகளில் வீழ்த்த முடியவில்லை என்றால், அபாயகரமான வீரராக மாறிவிடுவார். அதேபோல் இந்திய அணியில் குல்தீப் யாதவின் அபாரமான ஃபார்மில் இருக்கிறார்" என்று பேசியுள்ளார்.