பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைமை செயல் அதிகாரி திடீர் ராஜினாமா
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை செயல் அதிகாரியான வாசிம் கான் ராஜினாமா செய்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கை இதனை உறுதிய செய்துள்ளது. அதன் உறுப்பினர்கள் வாசிம் கானின் ராஜினாமா குறித்து கலந்தாலோசித்துள்ளனர்.
இவர் கடந்த 2019ல் எஹ்சன் மணியால் இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
வாசிம் 2019லிருந்து 3 ஆண்டுகளுக்கு சிஇஓ பொறுப்பில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைய உள்ள நிலையில்,
தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து வாரியத்தின் தலைவரான ரமீஸ் ராஜா புதிய செயல் அதிகாரியை விரைவில் நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.