Sunday, May 11, 2025

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார் சொகைல் தன்வீர்.. - ஷாக்கில் ரசிகர்கள்...!

Pakistan national cricket team
By Nandhini 2 years ago
Report

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சொகைல் தன்வீர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சொகைல் தன்வீர் ஓய்வு அறிவிப்பு

கடந்த 2007ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் சோகைல் தன்வீர் அறிமுகமானார். இவர் கிட்டதட்ட 62 ஒருநாள் போட்டிகளிலும், 57 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வந்தார். இருந்தாலும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். கடைசியாக குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக 2018/19 மற்றும் 2021/22 ஆண்டுகளில் விளையாடியிருந்தார்.

இந்நிலையில், ஐ.பி.எல். தொடரின் முதல் சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பாகிஸ்தானின் சொகைல் தன்வீர் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தற்போது இது தொடர்பான செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த செய்தியைக் கேட்ட அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி கமெண்ட் செய்து வருகின்றனர்.

pakistan-cricket-sohail-tanvir-retired