அவர் இல்லாம உங்களால ஜெயிக்க முடியாது; இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் வீரர் !!
இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரரான சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் படுதோல்வியை சந்தித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
சமபலம் கொண்ட இரு அணிகள் இந்த தொடரில் விளையாடுவதாலும், இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் விளையாட உள்ளதாலும், இந்த தொடருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் துவங்க இன்னும் ஒரு மாதம் இருந்தாலும், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் தற்பொழுதே தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் தெரிவிக்க துவங்கிவிட்டனர்.
அதே போல் இரு அணிகளுக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளையும் முன்னாள் வீரர்கள் பலர் வழங்கி வருகின்றனர். அந்தவகையில், இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான் சல்மான் பட், இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து சல்மான் பட் பேசுகையில், “இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமாரும் இடம்பெற்றிருக்க வேண்டும். யார் என்ன சொன்னாலும், புவனேஷ்வர் குமார் பந்தை ஸ்விங் செய்வதில் மிக சிறந்தவர். இங்கிலாந்தின் பெரும்பாலான ஆடுகளங்கள் வேகத்திற்கும், ஸ்விங்கிற்குமே சாதகமாக இருக்கும். இது போன்ற ஆடுகளங்களில் விளையாடும் பொழுது புவனேஷ்வர் குமார் இல்லாமல் இந்திய அணி எப்படி சென்றது என தெரியவில்லை.
புவனேஷ்வர் குமாரால் கடைசி நேரத்தில் கூட பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை பல போட்டிகளில் பார்த்துள்ளோம். இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சனை போன்றே புவனேஷ்வர் குமாரும் மிக சிறந்த பந்துவீச்சாளர்.
ஆனால் என்னைவிட இந்திய நிர்வாகத்திற்கே இந்திய வீரர்களை பற்றி அதிகம் தெரியும், புவனேஷ்வர் குமார் போன்ற வீரர்களை அணியில் எடுக்காததற்கும் எதாவது காரணம் இருக்கும். ஆனால், இனி கூட
புவனேஷ்வர் குமாரை இந்திய அணி இங்கிலாந்திற்கு அழைக்கலாம் என்பதே எனது கருத்து” என்று தெரிவித்தார்.