உலகக்கோப்பையிலிருந்து பாகிஸ்தான் புறக்கணிப்பு...? - அஸ்வின் பளிச் பதில்
உலகக்கோப்பையிலிருந்து பாகிஸ்தான் புறக்கணிப்பு குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் பதில் கொடுத்துள்ளார்.
இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது
6 அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது.
இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
2023ம் ஆண்டின் ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது. மேலும், வேறு ஒரு பொதுவான இடத்தில் ஆசிய கோப்பை தொடர் நடத்தப்படும் என்று தெரிவித்தார். இவரின் இந்த பேச்சுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம்
இதனையடுத்து, இது தொடர்பாக முடிவு எடுக்க பக்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் நேற்று முன்தினம் கூட்டத்தை நடத்தியது. பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வாய்ப்பில்லை என்று இந்தியாவும், தங்கள் நாட்டில் தான் ஆசிய கோப்பை போட்டியை நடத்தியாக வேண்டும் என்பதில் பாகிஸ்தானும் விடாப்பிடியாக இருந்தது. இதனால், கூட்டத்தில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.
அஸ்வின் பதில்
இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்காது என்று இந்திய வீரர் அஷ்வின் கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
பாகிஸ்தானுக்கு நாம் செல்லாவிட்டால் அவர்கள் இந்தியாவுக்கு வரமாட்டோம் என்கிறார்கள். ஆனால் இப்படி நடப்பதை நாம் பலமுறை பார்த்துள்ளோம். ஆசிய கோப்பை தொடரை அங்கு நடத்தக்கூடாது என நாம் சொல்லும் போது அவர்களும் நமது இடத்துக்கு வரமாட்டோம் என்று சொல்லத்தான் செய்வார்கள்.
ஆனால் அது சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன். ஆசிய கோப்பை இலங்கைக்கு மாற்றப்படலாம். துபாயில் பல தொடர்கள் நடந்துள்ளன. ஆசிய கோப்பை தொடர் இலங்கைக்கு மாற்றப்பட்டால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்றார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.