பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி - பிளாஸ்டிக் பேக்கில் சமையல் எரிவாயு அடைத்து விற்பனை...!
பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பிளாஸ்டிக் பேக்கில் சமையல் எரிவாயு அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பிளாஸ்டிக் பேக்கில் சமையல் எரிவாயு
பாகிஸ்தானில் சிலிண்டர்களுக்குப் பதிலாக பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட எரிவாயுவை சமையலுக்கு பயன்படுத்தும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது.
எரிவாயு குழாய் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட கடைகளுக்குள் பைகளை நிரப்பி எரிவாயு விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் அதை சமையலறையில் ஒரு சிறிய மின்சார உறிஞ்சும் பம்ப் உதவியுடன் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது இது குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

#Video | As economic crisis grips #Pakistan, people in were compelled to use plastic bags to fulfill their #LPG (cooking gas) needs, as seen in videos widely shared on social media. #PakistanEconomicCrisis @kakar_harsha @sneheshphilip @amritabhinder @RDXThinksThat @Tiny_Dhillon pic.twitter.com/UUrNj0THAB
— Aneesa Tareen (@TareenAneesa) January 2, 2023