படுதோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன்
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்களை நம்பியதாக, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா தெரிவித்தார்.
இந்திய அணி வெற்றி
இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி கொழும்பின் பிரேமதாசா மைதானத்தில் நடந்தது.

முதலில் ஆடிய இந்திய அணி 175 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி படுதோல்வியடைந்தது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 18 ஓவர்களை சுழற்பந்துவீச்சாளர்களை வைத்தே வீச வைத்தது.
பாகிஸ்தான் கேப்டன்
போட்டிக்கு பின்னர் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, "நாங்கள் எங்கள் சுழற்பந்து வீச்சாளர்களை நம்பினோம். ஆட்டத்தின் சில பகுதிகளில் நினைத்தது நடக்கவில்லை.
கடந்த 6 மாதங்களில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டதால், எங்கள் சுழற்பந்து வீச்சாளர்களை நாங்கள் எப்போதும் நம்புவோம் என்பது தெளிவாகிறது.
பேட்டிங்கைப் பொறுத்தவரை நாங்கள் நன்றாகத் தொடங்கவில்லை என்று நினைக்கிறேன். எங்களை நாங்களே பயன்படுத்திக் கொள்ளவில்லை" என தெரிவித்தார்.

