1 கோடி செலவில் 20,000 பேருக்கு விருந்து; பிச்சைக்காரர்கள் வைத்த டிரீட் - ஏன் தெரியுமா?
பிச்சைக்கார குடும்பம் 1 கோடி செலவில் 20,000 பேருக்கு விருந்து வைத்துள்ளனர்.
பிச்சைக்கார குடும்பம்
பெரும்பாலான பிச்சைக்காரர்கள் பொருளாதாரத்தில் மிக நலிவடைந்து அடுத்த வேலை உணவுக்காக யாசகம் பெற்று தங்கள் வாழக்கையை நடத்துவார்கள்.
விதிவிலக்காக சில பிச்சைக்காரர்கள் லட்சக்கணக்கில் வருமானம், அடுக்குமாடி வீடு என ஹை கிளாஸ் பிச்சைக்காரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
20000 பேருக்கு விருந்து
இதே போல் பாகிஸ்தான் நாட்டின் குஜ்ரன்வாலா பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த பிச்சைக்கார குடும்பம் அவர்களுடைய பாட்டியின் 40 வது நினைவு நாளை அனுசரிக்க 1.25 கோடி பாகிஸ்தான் ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 38 லட்சம்) செலவில், பிரம்மாண்ட விருந்து ஒன்றை வைத்துள்ளது.
Beggars in Gujranwala reportedly spent Rs. 1 crore and 25 lacs on the post funeral ceremony of their grand mother 🤯🤯
— Ali (@PhupoO_kA_betA) November 17, 2024
Thousands of people attended the ceremony.
They also made arrangement of all kinds of meal including beef, chicken, matranjan, fruits, sweet dishes 😳😳 pic.twitter.com/Jl59Yzra56
இந்த விருந்தில் 20,000 பேர் கலந்து கொண்டுள்ளனர். மதியம் மற்றும் இரவு என இரண்டு வேளைகளுக்கு விருந்து நடந்துள்ளது. இந்த விருந்தில் பாரம்பரிய உணவுகளான முராப்பா, ஆட்டிறைச்சி ஆகியவை பரிமாறப்பட்டுள்ளது. இந்த விருந்திற்காக 250 ஆடுகள் வெட்டப்பட்டுள்ளது. மேலும் விருந்துக்கு வந்து செல்வதற்கு இவர்களே 2,000 வாகனங்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. வடிவேல் காமெடியில் வருவது போல் பிச்சைக்காரனுக்கு இவ்வளவு சம்பாத்தியமா என நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.