டி20 உலக கோப்பை கிரிக்கெட் : போராடிய நமீபியா , அரை இறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தான்

T20WorldCup PAKvNAM
By Irumporai Nov 02, 2021 10:28 PM GMT
Report

டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றது. 12வது நாளான நேற்று  இரண்டு போட்டிகள் நடைபெற்றது.

அபு தாபி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய முதல் போட்டியில், வங்கதேசம் - தென்னாப்ரிக்கா மோதின. இதில், தென்னாப்ரிக்கா அணி வெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் - நமிபியா அணிகள் மோதின.

இதில்  டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரிஸ்வான், கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர்.

பாபர் அசாம் 70 ரன்னில் அவுட்டானார். ரிஸ்வான் 79 ரன்னுடனும், ஹபீஸ் 39 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர். இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா களமிறங்கியது.

 நமீபியா அணிக்கு, ஸ்டீபர்ன் பார்ட் (29), கிரேக் வில்லியம்ஸ் (40), டேவி வீஸ் (43*) ஆகியோர் ரன் சேர்த்தனர். இதனால், நமிபியா இலக்கை நெருங்கியது.

ஜெயிக்கிறோமோ தோக்குறோமோ சண்டை செய்யனும் என்பதை உறுதி செய்த நமிபியா, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது நமிபியா அணி.

எனினும் இலக்கை எட்ட தவறியதால், 40 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.