2024 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு அதிரடி தடை - காரணம் இதுதான்..!!

Pakistan World
By Jiyath Dec 29, 2023 07:28 AM GMT
Report

இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை முற்றிலும் தடைசெய்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம் 

புத்தாண்டை வரவேற்க உலக நாடுகள் தயாராகி வருகிறது. 2023ம் ஆண்டு முடிவடைந்து 2024ம் ஆண்டு பிறக்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அதற்கான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

2024 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு அதிரடி தடை - காரணம் இதுதான்..!! | Pakistan Bans New Year Celebration 2024

இந்நிலையில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை முற்றிலும் தடைசெய்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் பொறுப்பு பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் "பாலஸ்தீனத்தின் துயரமான சூழ்நிலையை மனதில் வைத்து, நமது பாலஸ்தீன சகோதர, சகோதரிகளுக்கு ஒற்றுமையை காட்ட, புத்தாண்டு தொடர்பான எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு கடுமையான தடைவிதிக்கப்படும்.

கவலையில் ஆழ்த்தியுள்ளது

விதிமுறை அனைத்தையும் மீறி இஸ்ரேல் படை 21,000 பாலஸ்தீனர்களை கொன்று குவித்துள்ளது. இதில் 9,000 குழந்தைகள் அடங்குவர்.

2024 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு அதிரடி தடை - காரணம் இதுதான்..!! | Pakistan Bans New Year Celebration 2024

அப்பாவி குழந்தைகள் படுகொலை, காசா மற்றும் மேற்கு கரையில் ஆயுதமின்றியுள்ள பாலஸ்தீனர்கள் இனப்படுகொலை ஒட்டுமொத்த பாகிஸ்தான் மக்களையும், முஸ்லிம் உலகத்தையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.