அடுத்த 3 வாரங்களில் பாகிஸ்தான் திவாலாகும் - வல்லுநர்கள் அதிர்ச்சி தகவல்...!
அடுத்த 3 வாரங்களில் பாகிஸ்தான் திவாலாகிவிடும் என்று சர்வதேச வல்லுநர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.
அடுத்த 3 வாரங்களில் பாகிஸ்தான் திவாலாகும்
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு வரலாறு காணாத மழை பெய்தது. கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாயின. இதன் காரணமாக அங்கு கோதுமை உள்ளிட்ட பல உணவு தானியங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது
. தற்போது கடுமையான பண நெருக்கடியால், பாகிஸ்தானிலுள்ள அரசு அலுவலகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இது தவிர அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியிலுள்ள தனது தூதரகத்தையும் பாகிஸ்தான் அரசு விற்க முடிவு செய்து உள்ளதாகவும், சுமார் 4 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்தத் தூதரகக் கட்டடத்தைப் பலர் ஏலம் எடுப்பதற்கு முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
தற்போது, சர்வதேச நிதியத்திடமும் 650 கோடி டாலரை கடனாக பாகிஸ்தான் அரசு கேட்டுள்ளது. இருந்தாலும், பாகிஸ்தான் இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வழியில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்திருக்கிறது. இதனால், அடுத்த 3 வாரங்களில் பாகிஸ்தான் திவாலாகும் என்று சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி IBC Tamil
வரலாற்றில் முதன்முறையாக - நாட்டில் நடந்த பாரிய மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்களுக்கு விளக்கமறியல் IBC Tamil