மனைவியை விவாகரத்து செய்த நாளில் மீண்டும் வேறு பெண்ணை திருமணம் செய்த அரசியல்வாதி
பாகிஸ்தானில் மனைவியை விவாகரத்து செய்த நாளில் மீண்டும் வேறு பெண்ணை அரசியல் பிரமுகர் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பிரபல கட்சியின் உறுப்பினராக இருக்கும் ஆமிர் லியாகத் என்ற 49 வயது நபர் ஏற்கனவே முதல் மனைவியை விவாரத்து செய்துவிட்டு 2வது திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
இதனிடையே 2வது மனைவி கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி ஆமிர் லியாகத்திடம் இருந்து விவாகரத்து பெற்றதாக அறிவித்தார். இதனால் கடுப்பான ஆமிர் அன்றைய தினமே 19 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
தன்னைவிட 31 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்துள்ள லியாகத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “எனது நலம் விரும்பிகளே எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். நான் இருண்ட சுரங்கப்பாதையை கடந்து வந்துள்ளேன். அது தவறான திருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் நான் சிறுவயதில் இருக்கும்போது தொலைக்காட்சியில் அவரை பார்ப்பேன். நான் அழும்போதெல்லாம், என்னுடைய பெற்றோர், டி.வி.யில் அவரது படத்தை காண்பிப்பார்கள் என லியாகத்தை திருமணம் செய்துக் கொண்ட பெண் தெரிவித்துள்ளார்.