’’ அவரோட பவுலிங்கை எங்க ஏரியா குழந்தைங்க கூட ஈசியா அடிச்சிருவாங்க’’ - இந்திய பவுலரை விமர்சித்த பாகிஸ்தான் வீரர்

salmanbutt t20 worldcup indvspak varunchakaravarthy
By Irumporai Oct 27, 2021 08:07 AM GMT
Report

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஒருவரை பாகிஸ்தான் வீரர்  கேலி செய்துள்ளது  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரின் 16-வது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின்.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்து. இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

’’ அவரோட பவுலிங்கை எங்க ஏரியா   குழந்தைங்க கூட ஈசியா அடிச்சிருவாங்க’’  -  இந்திய பவுலரை  விமர்சித்த பாகிஸ்தான் வீரர் | Pak Player Salman Butt Indias Varun Chakaravarthy

குறிப்பாக ஒரு விக்கெட் கூட இழக்காமல் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இந்திய  ரசிகர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் (Salman Butt), இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை (Varun Chakaravarthy) விமர்சனம் செய்துள்ளார்.

அதில், ‘வருண் சக்கரவர்த்தி ஒரு சிறந்த பவுலராக இருக்கலாம். ஆனால் அவரால் பாகிஸ்தான் வீரர்களை எந்த விதத்திலும்  ஒன்றும் முடியவில்லை. பாகிஸ்தானில் தெருவில் விளையாடும் குழந்தைகள் கூட அவரின் பந்தை எளிதாக எதிர்கொள்வார்கள்’ என சல்மான் பட் கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.