இலங்கையோட நிலமை பாகிஸ்தானுக்கும் வரலாம் : எச்சரிக்கும் நிதியமைச்சர்

Pakistan
By Irumporai Jun 14, 2022 04:43 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

 பாகிஸ்தானிற்கு இலங்கையில் ஏற்பட்ட நிலை வரலாம் என அந்நாட்டின் நிதியமைச்சர் கூறியுள்ளார் .

மானியத்தை ரத்து செய்யணும்

பாகிஸ்தான் நிதியமைச்சர் முஃப்தாஸ் இஸ்மாயில் அந்நாட்டி செய்தி நிறுவனத்திற்கு நாட்டின் நிதி நிலை குறித்து பேசினார் : அப்போது பெட்ரோலிய பொருள்ட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்யும்படி சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தி வருகிறது.

இலங்கையோட நிலமை பாகிஸ்தானுக்கும் வரலாம் : எச்சரிக்கும் நிதியமைச்சர் | Pak Finance Minister Warns

பெட்ரோல் லிட்டருக்கு 19 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 53 ரூபாயும் அரசு மானியம் வழங்குகிறது. இலங்கையும் இதேபோல் தான் பொதுமக்களுக்கு மானியம் வழங்கியது. தற்போது இலங்கை திவாலாகிவிட்டது. பெட்ரோல், மின்சார விலையை உயர்த்தவில்லை என்றால் நாடு நிதி நிலை பற்றாக்குறைக்கு தள்ளப்படும்.

இலங்கை நிலை பாகிஸ்தானுக்கும் வரலாம்

பெட்ரோலிய பொருட்கள் மீதான மானியத்தை ரத்து செய்து விலையை உயர்த்தவில்லையென்றால் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு நிதி உதவிகளை வழங்காது. இவ்வாறு நடைபெறும் பட்சத்தில் நாடு அழிவை நோக்கி செல்லும். கடுமையான முடிவுகளை எடுங்கள் என்று பிரதமரிடம் நான் கூறினேன்.

ஆனால், பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதை பிரதமர் விரும்பவில்லை. இலங்கை இன்று அதிக விலைக்கு எரிபொருளை வாங்குகிறது. மக்களுக்கு மருந்துப்பொருட்கள் வாங்கவும் அந்நாட்டில் பணம் இல்லை.

பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தவில்லையென்றால் இலங்கையை போன்ற நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்படும் என்று எச்சரித்துள்ளார்  .

ஒற்றை ஆளாய் புரட்டியெடுத்த ஷதாப்கான்! ஆறு போட்டிகளில் வென்று மேற்கிந்தியதீவுகளை ஒயிட்வாஷ் செய்த பாகிஸ்தான்