வரலாறு காணாத வீழ்ச்சி: சிக்கிக்கொண்ட பாகிஸ்தான் - ஒரு டாலர் 262 ரூபாய்

Pakistan
By Sumathi Jan 28, 2023 06:43 AM GMT
Report

 பாகிஸ்தான், அதிக அளவில் பொருளாதார வீழ்ச்சியை அடைந்து உள்ளது.

வீழ்ச்சி

இதன் காரணமாக உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு என பல்வேறு பிரச்சினைகளை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது.

வரலாறு காணாத வீழ்ச்சி: சிக்கிக்கொண்ட பாகிஸ்தான் - ஒரு டாலர் 262 ரூபாய் | Pak Currency Plunges To 262 Against Dollar

கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்பட சர்வதேச நிதி அமைப்புகளிடம் பாகிஸ்தான் கடன் வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

பாதிப்பு

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு அமெரிக்க டாலர் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 262.6 ரூபாயாக உள்ளது.

ரூபாயின் வீழ்ச்சி பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேலும் பின்நோக்கி இழுத்து சென்றுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.