பாகிஸ்தான் வீராங்கனையின் குழந்தையை கொஞ்சி விளையாடும் இந்திய வீராங்கனைகள்- வைரல் வீடியோ

Swetha Subash
in கிரிக்கெட்Report this article
மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனையின் குழந்தையுடன் இந்திய வீராங்கனைகள் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் நிலையில் தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை நேற்று எதிர்கொண்டது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 244 ரன்கள் எடுத்தது.
245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், போட்டியில் பங்கேற்க வந்த பாகிஸ்தான் அணி கேப்டன் பிஸ்பா மரூஃப் தனது 6 மாத கைக் குழந்தையை
போட்டிக்கு நடுவே சென்று பார்த்து கொண்டே கிரிக்கெட் விளையாடியது ரசிகர்களிடையே பிரமிப்பில் ஆழ்த்தியது.
பிஸ்பா மரூஃப் குழந்தையை இந்திய வீராங்கனைகளும் கொஞ்சி விளையாடினர்.
How lovely! Sport builds bridges https://t.co/OdQbwlZ6RD
— Cricketwallah (@cricketwallah) March 6, 2022
மேலும் போட்டி முடிந்ததும், பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமாவை பார்ப்பதற்காக இந்திய வீராங்களை அனைவரும் பாகிஸ்தான் வீராங்கனைகளின் அறைக்கு சென்றனர்.
அங்கு குழந்தையுடன் கொஞ்சி, விளையாடிய இந்திய வீராங்கனைகள் போட்டோவும், வீடியோவும் எடுத்து கொண்டனர். பின்னர் குழந்தைக்கு சாக்லெட்டையும் பரிசாக தந்தனர்.
இந்திய வீராங்கனைகளின் இந்த செயல் கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
களத்தில் ஆக்கோரஷமாக விளையாடினாலும், களத்துக்கு வெளியே, ஒரு குடும்பம் போல், நண்பர்கள் போல் இரு நாட்டு வீராங்கனைகளும் இருந்தது இணையத்தில் அனைவரது பாரட்டுக்களையும் பெற்று வருகிறது.