ஹபீஸ் சயீத் இல்லம் அருகே வெடிகுண்டு தாக்குதல் - 4 பேருக்கு மரண தண்டனை

Lahore court hafiz saeed home blast
By Petchi Avudaiappan Jan 12, 2022 11:29 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

 ஹபீஸ் சயீத் இல்லம் அருகே நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு தண்டனை குறித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் லாகூர் இல்லத்திற்கு வெளியே கடந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வெடி குண்டு தாக்குதலில் பல வீடுகள், கடைகள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் சேதம் அடைந்தன.  

இது தொடர்பாக தடை செய்யப்பட்ட தெஹ்ரீக் ஐ தலீபான் அமைப்பின் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் எனக்கூறப்படும் பீட்டர் பால் டேவிட், சஜ்ஜத் ஷா, ஜியாவுல்லா மற்றும் ஆயேஷ் பிபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நேற்று லாகூர் நீதிமன்றம் குற்றவாளிகள் 3 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அதேசமயம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆயேஷ் பிபி என்ற பெண்ணுக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.