பிரபல நடிகைக்கு கைது வாரண்ட் பிறப்பித்த பாகிஸ்தான் நீதிமன்றம்
பிரபல இந்தி நடிகை சபா காமருக்கு பாகிஸ்தானின் லாகூர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி தொடர்கள், சினிமாக்களில் நடித்த நடிகை சபா காமர் 2017 ஆம் ஆண்டு இர்பான் கான் நடித்திருந்த இந்தி மீடியம் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானார்.
ஆனால் உள்அரசியல் பிரச்சனையால் சபாவுக்கு தொடர்ச்சியாக இந்தியில் நடிக்க வாய்ப்பு அமையாமல் போனது. இதனிடையே கடந்த வரும் நடிகை சபாவும், நடிகர் பிலால் சயீத்தும் லாகூர் ஓல்டு சிட்டியில் அமைந்துள்ள பழமையான மசூதியில் ஒரு வீடியோ நடனத்தை படமாக்கினர்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மசூதியின் புனிதத்தை இவர்கள் கெடுத்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இருவருக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்ட நிலையில் லாகூர் போலீசார் இவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இதனையடுத்து இருவரும் தங்கள் செயலுக்காக மன்னிப்பு கேட்டனர். இந்நிலையில் லாகூர் நீதிமன்றம் சபாவுக்கும் சயீத்துக்கும் ஜாமீனில் வெளிவரக்கூடிய கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் இந்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.