வெஸ்ட் இண்டீஸை பந்தாடிய பாகிஸ்தான் - 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

Petchi Avudaiappan
in கிரிக்கெட்Report this article
வெஸ்ட்இண்டீஸ் அணிக்கெதிராக நடைபெற்ற முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் சென்று இருக்கும் வெஸ்ட்இண்டீஸ் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. ஆனால் வெஸ்ட்இண்டீஸ் அணியில் 3 வீரர்கள் உள்பட 4 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் பாகிஸ்தான்-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி கராச்சியில் நேற்று நடந்தது.
இப்போட்டியில் ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ஆனால் முகமது ரிஸ்வான் (78 ரன்கள்), ஹைதர் அலி (68 ரன்கள்) விளாச 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது.
பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 19 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது.