Tuesday, Apr 29, 2025

உலகக்கோப்பை பாகிஸ்தானுக்கா? - நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி

PakvsNz
By Petchi Avudaiappan 4 years ago
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

டி20 உலகக்கோப்பை தொடரில் சார்ஜாவில் இன்று நடைபெற்ற குரூப்-2 பிரிவு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் பாகிஸ்தான் அணி மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களம் கண்ட நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி வீரர் ஹாரிஸ் ரவுஃப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனை தொடர்ந்து பேட்டிங் செய்து விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் 33, சோயப் மாலிக் 27, ஆசிப் அலி 27 ரன்கள் எடுக்க  18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து அந்த அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசைக்க முடியாத அணியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.