பிரபல நடிகர் மரணம் - திரையுலகம் இரங்கல்!

Malayalam Actor Padannayil
By Thahir Jul 24, 2021 10:04 AM GMT
Report

பிரபல மலையாள நடிகர் படன்நயில் காலமானார். இவர் மேடை நாடகங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். ஸ்ரீகிருஷ்ணபுரத்தே நக்சத்திரத்திலக்கும், ருதன்மரே சூக்‌சிக்குகா ஆகிய படங்கள் மூலம் பிரபலமானார்.

பிரபல நடிகர் மரணம் - திரையுலகம் இரங்கல்! | Padannayil Malayalam Actor

பிரபல மலையாள நடிகர் படன்நயில். இவர் மேடை நாடகங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். ஸ்ரீகிருஷ்ணபுரத்தே நக்சத்திரத்திலக்கும், ருதன்மரே சூக்‌சிக்குகா ஆகிய படங்கள் மூலம் பிரபலமானார். அடயத்தே கண்மனி, சொப்ன லோகத்தே பாலபாஸ்கர், குஞ்சிரமயனம், அமர் அக்பர் அந்தோனி உள்பட 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். படன்நயிலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கேரள மாநிலம் கடவந்தராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88. படன்நயில் மறைவுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால். திலீப் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.