'பாடை காவடி' திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
உலகப் பிரசித்தி பெற்ற 'பாடைகட்டி' மாரியம்மன் ஆலயத்தில் புஷ்ப பல்லாக்கு விழா விகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
'பாடை காவடி' திருவிழா
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீசீதளா தேவி மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் 'பாடை காவடி' திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
அதனை தொடர்ந்து நேற்று இரவு 12 மணி அளவில் புஷ்ப பல்லாக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழாவில், இன்று இரவு சரியாக 12 மணி அளவில் ஸ்ரீ மகா மாரியம்மன் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து புஷ்ப பல்லக்கில் அமர்ந்து பக்தர்கள் காட்சி கொடுத்தார்.
வீதிகளில் வலம் வந்த புஷ்ப பல்லாக்கு
அதனை தொடர்ந்து நாதஸ்வர தவில் வித்வான்கள் கலந்து கொண்டு இசைக்கச்சேரி நடைபெற்று மகாதீபாரதனையுடன் புஷ்ப பல்லாக்கு புறப்பட்டு தெரு வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
திருவிழாவில்பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். இரவு முழுவதும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.