தமிழ்நாட்டில் கேன் குடிநீர் கட்டணம் உயர்வு - அதிர்ச்சியில் பொதுமக்கள்
ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால் உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.
LPG தட்டுப்பாடு காரணமாக சில உணவகங்கள்
டீ, காபி மற்றும் சில உணவுகளின் விலையை உயர்த்தியுள்ளன. போர் நீடித்தால் இதே போல் பல்வேறு பொருட்களின் விலைவாசி உயரும் என்ற அச்சம் மக்களிடையே உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் தண்ணீர் கேன்களின் விலை உயர்வதாக வெளியான தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலப்பொருள், மின்கட்டண உயர்வு, ஊழியர்களின் ஊதியம் ஆகியவை காரணமாக 20 ஆண்டுகளுக்கு பிறகு விலையை உயர்த்துவதாக தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, 1 லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை ரூ3 மற்றும் 20 லிட்டர் கேனின் விலை ரூ.5 உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஏராளமானோர் தனது அன்றாட குடிநீர் தேவைக்கு கேன் தண்ணீரையே பயன்படுத்தி வரும் நிலையில், இந்த விலையேற்றம் அவர்களை கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகிறது.