இயக்குனர் பா.ரஞ்சித்துடன் கூட்டணி சேரும் நடிகர் கமல் - ஹிட்டடிக்குமா?

Kamal Haasan Pa. Ranjith
By Anupriyamkumaresan Nov 09, 2021 10:01 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

நடிகர் கமல்ஹாசன் மற்றும் பா.ரஞ்சித் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படத்தில் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குனர் பா.ரஞ்சித்துடன் கூட்டணி சேரும் நடிகர் கமல் - ஹிட்டடிக்குமா? | Pa Ranjith Kamalhaasanjoin And Start New Movie

இந்தப் படத்தையடுத்து மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்திற்கான கதையை கமல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதையடுத்து தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் கமல் நடிக்க இருப்பதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

பா ரஞ்சித் உடனான பேச்சு வார்த்தைக்குப் பின்னர் தான் கமல் வெற்றிமாறன் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.