துணிவில்லாத அமைச்சர் : இயக்குனர் பா.ரஞ்சித் ஆவேசம்

DMK Pa. Ranjith
By Irumporai Jan 13, 2023 07:07 AM GMT
Report

புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில்பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க துணிவில்லாத அமைச்சர் என இயக்குநர் பா,ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

குடிநீர் தொட்டி விவகாரம்

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் புழங்கும் குடிநீர் டேங்கில் மர்ம நபர்கள் மலத்தை கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துணிவில்லாத அமைச்சர் : இயக்குனர் பா.ரஞ்சித் ஆவேசம் | Pa Ranjith Condemn Ministers

அதை தொடர்ந்து அங்கு தீண்டாமை கொடுமைகள் நடப்பதாக தெரிய வந்த நிலையில் புதுக்கோட்டை ஆட்சியர் நடவடிக்கைகள் மேற்கொண்டார்

துணிவில்லாத அமைச்சர்

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் பா.ரஞ்சித் தொடரூம் சமூக அநீதி புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்ச்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரனை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடூம் கண்டனங்கள்

வன்மையான கண்டனங்கள்

வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனத்தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பது தமிழக அரசின் கடமையாகும்.

ஆனால்,விசாரணை என்ற பெயரில் இளைஞர்களை அழைத்து மனரீதியாக பாதிக்கும் நிலையில் குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டுமென்று நிர்பந்திக்கும் செயல் கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்படும் வலியை என்று தான் உணர்வீர்கள்