அடுத்த தலைமுறையை சாதி விழுங்கிக்கொண்டிருக்கிறது - பா ரஞ்சித் கடும் கண்டனம்

Tamil nadu Pa. Ranjith Tirunelveli
By Karthick Aug 12, 2023 07:31 AM GMT
Report

நாங்குநேரி சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் பா.ரஞ்சித், அடுத்த தலைமுறையை சாதி விழுங்கிக்கொண்டிருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

நாங்குநேரி சம்பவம்  

pa-ranjith-comments-on-nanguneri-incident

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில், சாதிய காழ்புணர்ச்சியால் சக மாணவனை பள்ளி மாணவர்கள் அரிவாளால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் படுகாயமுற்ற மாணவன் மற்றும் அவனது சகோதரி இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பா ரஞ்சித் வருத்தம்

இந்நிலையில், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் பா. ரஞ்சித், , “சாதி என்பது அழகிய சொல்! குடி பெருமை கொள்ளுவோம்! சாதி வாரி வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் வெற்றி பெருவது! சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் ஒன்றாக பார்ப்பது!  

pa-ranjith-comments-on-nanguneri-incident

நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவது! சாதி பெருமை உடை! சாதி அடையாள கயிறு! சாதி மறுப்பு காதலுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! என தமிழ்நாட்டில் இருக்கும் தீவிர சாதி பற்றின் காரணமாக, பட்டியலின மக்கள் மீது வெறுப்பை வளர்த்தெடுத்ததின் விளைவாகவே “நாங்குநேரியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சக மாணவன் மீது சாதி வன்மம் கொண்டு இத்தகைய கொடூர தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சாதி உணர்வு என்பது எப்படி பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பாக வளர்த்தெடுக்கபட்டு இருக்கிறது என்கிற உண்மை நிலவரத்தை இப்போதாவது சரியாக புரிந்துகொண்டு, இத்தகைய சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக திமுக அரசும், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், மக்களும் இணைந்து , அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.