ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு - பா.ரஞ்சித் மீதான வழக்கின் இறுதி அறிக்கைக்கு இடைக்காலத் தடை!
Case
Pa. Ranjith
By Thahir
ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் தனது கருத்தை வெளியிடும் சுதந்திரம் இருக்கிறது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி இளங்கோவன் கருத்து தெரிவித்திருக்கிறார். முன்ஜாமீன்கோரி ரஞ்சித் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு
பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டு, வழக்கின் இறுதி விசாரணையை ஆக்ஸ்ட் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.