ஆளுநர் தன் வேலையை தவிர மற்ற எல்லா வேலையும் பார்க்கிறார் - பா.ரஞ்சித் ஆதங்கம்
ஆளுநர் போக்கு மிகவும் கவலை அளிப்பதாக இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
பா. ரஞ்சித்
பா. ரஞ்சித் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தை இயக்கி வருகிறார். படத்திற்காக கேஜிஎப் பகுதியில் 55 நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டு சென்னை திரும்பியுள்ளார். தொடர்ந்து, நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் நடந்த விழாவில் பங்கேற்றார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னுடைய வேலையை தவிர மற்ற எல்லா வேலையும் பார்த்து வருகிறார் ஆளுநர். ஆளுநரின் இந்த மோசமான போக்கு மிகவும் கவலை அளிக்கிறது. எந்த தகவலின் அடிப்படையில் ஆளுநர் ஸ்டெர்லைட் விவகாரத்தில் இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை.
ஆதங்கம்
தவறான கருத்துக்கள் மூலம் பொதுவெளியில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். ஆளுநர் இப்படி பேசுவது மிகவும் தவறு. மேலும், யோகினி திரையரங்கம் என்பதால் இது வெளியே தெரிகிறது. பொதுவாகவே மால்கள் உள்ளிட்ட பெரிய திரையரங்குகளில் பழங்குடியின மக்களை அனுமதிப்பதில்லை.
அரசுதான் இதில் முழு கவனம் செலுத்த வேண்டும். இப்படி நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லாமே பொதுவாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம். ஆனால் பொது என்பதுதான் இங்கே பிரச்சனையாக இருக்கிறது. அதற்காகத்தான் தனியாக கொடுங்கள் என்று கேட்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.