ராஜ்யசபா உறுப்பினராக பி.டி. உஷா பதவியேற்றார் - வைரலாகும் வீடியோ
பி.டி. உஷா
இந்திய விளையாட்டுச் சரித்திரத்தில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக ‘இந்தியாவின் தங்க மங்கை’ என்று அழைக்கப்படுபவர் பி.டி. உஷா.
பி.டி. உஷா தனது 14 வயதில் தேசிய அளவில் நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்று இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தார். ஆசியப் போட்டிகளில் 1982ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை தடகளப் போட்டிகளில் 13 தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார்.
இந்தியா மற்றும் சர்வதேச அளவில் மொத்தம் 33 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவருடைய தேசிய அளவில் பல சாதனைகளை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. மத்திய அரசு பல கவுரவ விருதுகளை பி.டி. உஷாவிற்கு வழங்கியுள்ளது.
1983ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும், 1983ம் ஆண்டு அர்ஜுனா விருதும் வழங்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு
இந்நிலையில், பி.டி.உஷா ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ശ്രീമതി. @PTUshaOfficial രാജ്യസഭാംഗമായി സത്യപ്രതിജ്ഞ ചെയ്തു. pic.twitter.com/5oTplPkGKA
— BJP KERALAM (@BJP4Keralam) July 20, 2022
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க மக்கள் அளித்த ஆணை : அரசுக்கு நினைவுபடுத்தும் எதிரணி எம்.பி IBC Tamil
கல்முனை பிரபல பாடசாலையில் மாணவர்களிடம் அங்கசேட்டை: பொது சுகாதார பரிசோதகரை கைது செய்ய வலைவீச்சு IBC Tamil
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan