கைகோர்க்கும் இயக்குனர் பா.ரஞ்சித் - நடிகர் சூர்யா? வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகம்!

actor director surya new movie pa.ranjith
By Anupriyamkumaresan Jun 09, 2021 10:07 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in திரைப்படம்
Report

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளன.

இயக்குனர் பா ரஞ்சித் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார்.

பெரும்பாலும் பொழுதுபோக்கு அம்சமாகவே படங்களை எடுத்து வந்த இயக்குனர்கள் மத்தியில் குறிப்பிட்ட கருத்தியல் சார்ந்த படங்களை எடுத்து தனது சித்தாந்தங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் இயக்குனர் பா.ரஞ்சித்.

கைகோர்க்கும் இயக்குனர் பா.ரஞ்சித் - நடிகர் சூர்யா? வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகம்! | P Ranjith Director Joins With Actor Surya Newmovie

தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் போன்ற கருத்தியல் கொண்ட இயக்குனர்கள் உருவாக விதை போட்டவராக ரஞ்சித் அமைந்துள்ளார்.

பா ரஞ்சித் தற்போது ஆர்யா நடிப்பில் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் அடுத்ததாக நடிகர் சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவிருப்பதாக சினிமா வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன.

கைகோர்க்கும் இயக்குனர் பா.ரஞ்சித் - நடிகர் சூர்யா? வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகம்! | P Ranjith Director Joins With Actor Surya Newmovie

இந்தப் படமும் உண்மை சம்பவங்களை அடிப்படியாக வைத்து எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த இரண்டு படங்களை தொடர்ந்தே பா. ரஞ்சித்துடன் சூர்யா கூட்டணி அமைக்கலாம் என கூறப்படுகிறது.