திருப்பதி கோவிலை போன்று தமிழக கோவில்கள் உருவாக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு
திருப்பதிக்கு இணையாக தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை உருவாக்க முதல்வர் ஆணையிட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, கடந்த காலங்களை போல் இல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திருக்கோயில்களை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இணையாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதுகுறித்து பல்வேறு நடவடிக்கைகளை இந்து இந்துசமய அறநிலையத்துறை எடுத்துள்ளது என்றும் கோயில்களின் மேம்பாட்டுக்காக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட இருப்பதாகவும் கூறினார்.
மேலும், முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, வரும் 17ம் தேதி இந்துசமய அறநிலையத்துறை ஆணைய அலுவலகத்தில் சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.